முகப்பு News நாட்டை கட்டியெழுப்புவதற்கு முன்னர் கட்சியை கட்டியெழுப்ப வேண்டும்: ரவி கருணாநாயக்க

நாட்டை கட்டியெழுப்புவதற்கு முன்னர் கட்சியை கட்டியெழுப்ப வேண்டும்: ரவி கருணாநாயக்க

நாட்டை கட்டியெழுப்புவதற்கு முன்னர் முதலில் கட்சியை கட்டியெழுப்ப வேண்டியது அவசியம் என ஐக்கிய தேசிய கட்சியின் உதவி தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 72ஆவது ஆண்டுவிழா, பிரதமர் தலைமையில் கட்சி தலைமை அலுவலகமான சிறிகொத்தவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிலையில், அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ஐக்கிய தேசியக் கட்சி, பாரியதொரு மக்கள் தொகையை கொழும்பிற்கு கொண்டுவருதற்கான செயற்பாட்டினை முன்னெடுக்க வேண்டும்.
இந்தவகையில் கட்சி பின்வரிசை உறுப்பினர்களின் பெறுமதியை உணர்ந்து கொள்வதும் ஒரு முக்கிய விடயம்’ எனவும் அவர் சுட்டிகாட்யுள்ளார்.

இவரை தொடர்ந்து பேசிய ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸ கூறுகையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கினால் ஐக்கிய தேசிய கட்சியை சக்திமிக்க கட்சியாக மாற்றுவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன்.

என்னால் இலட்சம் பேரை காலி திடமுகத்திற்கு கொண்டு வந்து கட்சியின் பெறுமதியை நிரூபிக்க முடியும். ஐக்கிய தேசிய கட்சியை சிறந்த முறையில் கட்டியெழுப்புவதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஐக்கியத்துடன் செயற்பட வேண்டும்.

அப்போதுதான் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் ஆகியவற்றில் கட்சியை வெற்றியடைய செய்ய முடியும்.

கூட்டு எதிரணி நடத்திய ஆர்ப்பாட்டம் ஒரு வேடிக்கை நிகழ்வாகவே காணப்பட்டது. அதாவது உணவு, மதுபானம் ஆகியவற்றை வழங்கும் நிகழ்வாகவே காணப்பட்டது. இதில் எந்ததொரு நோக்கமும் இல்லை’ என சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com