நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு

இன்று முதல் நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை குறைவடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஓரளவு மழை பெய்யும் என்றும் அந்த திணைக்களம் கூறியுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 40 கிலோமீற்றர் வேகத்திற்கு அதிகமான காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமான பலத்த காற்று வீசக்கூடும். இடி மின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]