நாட்டு மக்களின் தேவைக்கே காணாமல் போனோர் அலுவலகம்

நாட்டு மக்களின் தேவை மற்றும் நலனுக்காகவே காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கப்படுகிறது சர்வதேசத்தை தேவையை நிறைவேற்றுவது அல்ல என்று பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் பெருமையுடன் வாழக்கூடிய சூழலை அரசு ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் காணாமல் போனோர் சம்பவங்கள் இடம்பெறாத வகையில் இருப்பதற்கு இவ்வாறான பொறிமுறை ஒன்று தேவை.

இத்தகைய அலுவலகம் ஒன்றை அமைப்பதன் மூலம் படையினருக்கு எதிராக குற்றச்சாட்டை சுமத்துவது அல்லது அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் போன்றவை எந்த வகையிலும் இடம்பெறாது. இருப்பினும் காணாமல் போனோர் தொடர்பில் என்ன நடந்தது என்பதை அவர்களது குடும்பங்களுக்கு அறிவித்தல், தேவையான நிவாரணத்தை வழங்குவதல் ஆகிய விடயங்கள் இதன்மூலமாக இடம்பெறும்.

காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்களின் கூட்டமைப்பின் தலைவர் பிரிடோ பெர்னாண்டோ நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில், காணாமல் போனோர் தொடர்பான சம்பவம் குற்றச் செயலாக ஏற்றுக்கொள்வதை மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் எதிர்க்கின்றனர். இவ்வாறு எதிர்ப்பது மீண்டும் இவ்வாறான சம்பவங்களை மேற்கொள்ளும் நோக்கிலா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]