நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்த காவல்துறையைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் சிங்களக் குடும்பங்கள் முன்மாதிரியாகத் திகழ வேண்டும்

காவல்துறை

நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்த ‘காவல்துறை’யைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் சிங்களக் குடும்பங்கள் முன்மாதிரியாகத் திகழ வேண்டும் ரணவிரு சேவா மாவட்ட அலுவலர் ரீ.எச். கீர்திகா ஜயவர்தன

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் தாய் நாட்டிற்காக தமது உயிரைத் தியாகம் செய்த அல்லது சம்பவங்களின்போது அங்கவீனமடைந்த படையினர் மற்றும் பொலிஸாரின் தமிழ் முஸ்லிம் சிங்களக் குடும்பங்கள் ஒதுங்கி வாழாமல் தங்களை வளப்படுத்திக் கொண்டு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என ரணவிரு சேவா மட்டக்களப்பு மாவட்ட அலுவலர் ரீ.எச். கீர்திகா ஜயவர்தன தெரிவித்தார்.

காவல்துறை

“ரணவிரு சேவா” குடும்பங்களின் நலன்புரி மாதாந்தக் கூட்டம் புதன்கிழமை 27.03.2018 மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபொழுது அவர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர், தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற பேதமில்லாமல் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் படையிலும், பொலிஸ் கடமையிலும் இணைந்திருந்து தங்களைத் தியாகஞ் செய்தவர்களின் குடும்ப நல்வாழ்வாழ்வுக்காக ரணவிரு சேவா அதிகார சபை செயலாற்றி வருகின்றது.

அக்குடும்பங்களின் அங்கத்தவர்கள் தற்போது பல்வேறு பிரச்சிகைளை எதிர்கொண்டு வருகின்றார்கள், வசிப்பதற்கு வீடு, தங்களது உறவினர்களின் சம்பளக் கொடுப்பனவுகள், தங்கியிருப்போருக்கான வாழ்வாதாரம் உள்ளிட்ட பல தேவைகள் உள்ளன.அத்தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு அரசின் உதவியுடன் ரணவிரு சேவா முயற்சித்து வருகின்றது.

தங்கியிருப்போருக்கான சம்பளக் கொடுப்பனவு, ஏனையோருக்கான வாழ்வாதாரம், குடியிருக்க ஒரு இல்லம், மற்றும் இன்னபிற நலனோம்பு விடயங்களை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.

காவல்துறை

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்கட்டமாக ரணவிரு சேவா அதிகார சபையின் அனுசணையுடன் சுமார் 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 38 வீடுகள் தமிழ் முஸ்லிம் குடும்பங்களுக்கும் ஒரு வீடு சிங்களக் குடும்பத்திற்கும் நிருமாணிக்கப்பட்டுள்ளன.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடுகளற்றிருக்கும் ஏனைய தமிழ். முஸ்லிம் ரணவிரு சேவா குடும்பங்களுக்கு 56 வீடுகளை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்காகத் தங்களைத் தியாகம் செய்த குடும்பங்களின் நலனோம்பு விடயங்களைக் கவனிப்பதில் நாட்டு மக்களும் அதிகாரிகளும் அக்கறை கொள்ள வேண்டும்.

அதேவேளை, ரணவிரு சேவாவைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களக் குடும்பங்கள் இன மத பேதமின்றி ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் வாழவும், அக்குடும்பத்திலுள்ள அங்கத்தவர்களை எதிர்காலத்தில் ஐக்கியமாக வாழப் பழக்கப்படுத்த வேண்டும்.

காவல்துறை

இன மத மொழி பிரதேச வேறுபாடுகள் இந்நாட்டின் மனித வளங்களை காவு கொள்ள இனி ஒருபோதும் இடமளிக்க கூடாது” என்றார்.

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மரணித்த, காணாமல்போன, அல்லது சம்பவங்களின்போது அங்கவீனமடைந்த படையினர் மற்றும் பொலிஸாரில் தங்கி வாழ்ந்த 136 குடும்பங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளார்கள்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட ரணவிரு சேவா அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.சி. அப்துல் வஹாப், அதன் செயலாளர் எஸ். கனகசபை, பொருளாளர் ஏ. லிங்கராஜா உட்பட ரணவிரு பயனாளிக் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

காவல்துறை காவல்துறை காவல்துறை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]