நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை இன்று இரவு தொடக்கம் படிப்படியாக சீரடையும் – வானிலை அவதான நிலையம்

மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள ஹட்டன் – ஸ்டெதன் வெஸ்டன் தோட்டத்திற்கு இன்றைய தினம் தேசிய கட்டிட ஆய்வு நிறுவக அதிகாரிகள் விஜயம் செய்து ஆய்வுப் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

குறித்த பகுதியில் நேற்றைய தினம் ஏற்பட்ட மலை வெடிப்பு காரணமாக 3 தொடர் குடியிருப்பில் வசித்து வந்த 50 குடும்பங்களை சேர்ந்த 200 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறித்த தொடர் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள மலை ஒன்றில் குறித்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர்கள் ஹட்டன் – புருட்ஹில் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கபட்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களுக்கான உணவுப் பொருட்கள் கிராம சேவகர் பிரிவினால் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை இன்று இரவு தொடக்கம் படிப்படியாக சீரடையும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]