நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை பாதிப்பால் 7பேர் உயிரிழப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை பாதிப்பால் 7பேர் உயிரிழப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட பாதிப்புக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்வடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அத்தோடு குறித்த சீரற்ற காலநிலையால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டியுள்ள கங்கைகள் மற்றும் ஓயாக்கள் பெருக்கெடுத்துள்ளமையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் நில்வளா, களு, கிங் கங்கைகள் மற்றும் அத்தனகலு ஓயாவின் நீர் மட்டங்கள் கீழிறங்கி வருவதாகவும் தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாளை முதல் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மழையானது அதிகரிக்குமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ள நிலையில் இன்றைய தினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை நாட்டின் பல பகுதிகளில் பெய்யுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வடக்கு, மேல் மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் காலைவேளையில் மழை பெய்யுமெனவும் வானிலை அவதான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் நாட்டின் பெரும்பாலான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, இடி, மின்னல் தாக்கங்களிலிருந்து மக்கள் அவதாகமாக செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]