நாட்டில் இன, மத கலவரக்காரர்களை அடக்க விசேட அதிரடிப் படை களத்தில்

நாட்டில் இன, மத கலவரங்களைத் தூண்டுபவர்களையும், அக்கலவரங்களை நடத்துபவர்களையும் கைதுசெய்து சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் பொறுப்பு விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் இன

“நாளாந்தம் அதிகரித்துவரும் இத்தகைய இனக் கலவரங்களால் நாட்டின் அமைதி குலைக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவமும் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது விசேட அதிரடிப்படையினரிடமும் கலவரங்களை அடக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை முதல் நாடுமுழுவதிலும் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது” – என்று பொலிஸ் தலைமையகத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]