நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை – பிரதமர்

நாட்டின் பொருளாதாரத்தை எதிர்வரும் பத்து 15 வருடங்களுக்குள் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பூகோள கிராமத்தின் பெருமைக்குரிய பிரஜையாக வாழ்வதற்கான சந்தர்ப்பம் இதன் மூலம் ஏற்படுத்தப்படும் என்று மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இன்று இடம்பெற்ற இளைஞர் பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரில் பிரதமர் கருத்து வெளியிட்டார்.

ranil wickramasinghe

பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில் ,

மத்திய தர வர்க்கத்தினரை தொழில் வாய்ப்பு, கூடுதலான வருமான வழிகள் என்பனவற்றின் ஊடாக வலுவூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தப் பணிகளுக்காக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும் என பிரதமர் குறிப்பிட்டார்.

நாட்டில் பல தசாப்தங்களாக நிலவிய யுத்தத்தினால் பொருளாதார அபிவிருத்திக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இனங்களுக்கிடையிலான வேற்றுமையினால் நாடு பின்நோக்கித் தள்ளப்பட்டதாகவும் யுத்தத்தின் பின்னரும் எதிர்ப்பார்க்கப்பட்ட வெற்றிகளை அடைந்துகொள்ள முடியவில்லை என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

ஜனநாயகம், தேசிய ஒற்றுமை என்பனவற்றை அரசாங்கத்தால் உறுதிப்படுத்த முடிந்துள்ளது. நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய அரசியல் யாப்பு ஏற்படுத்தப்படும். சீர்குலைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பாரிய சவாலுக்கு அரசாங்கம் முகங்கொடுத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.