நாட்டின் பொருளாதாரத்தை புலம்பெயர் புலி ஆதரவளார்களுக்கு ஈடுவைக்க சதி

நாட்டின் பொருளாதாரத்தை புலம்பெயர் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களுக்குஉ காட்டிக்கொடுத்து. அவர்களின் கட்டுப்பாட்டில் இலங்கையின் பொருளாதாரத்தை தள்ளும் முயற்சியிலேயே நிதி அமைச்சர் ரவி கருநாயக்க ஈடுவட்டு வருவதாக பொது எதிரணி குற்றம் சுமத்தியுள்ளது.

பொரள்ளை வஜிரசர்மா பௌத்த மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு கூறினார்.

நாட்டின் பொருளாதாரத்தை

அவர் மேலும் கூறியதாவது,

அரசநிதி தொடர்பான அதிகாரங்கள் நாடாளுமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அந்த அதிகாரம் சட்டரீதியாக இலங்கை மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நாட்டின் பொருளாதார ஸ்தீரத்தன்மையை பேணவேண்டிய பொறுப்பு மத்திய வங்கியிடம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாணயத்தின் பெறுமதியை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பேணுவதன் ஊடாக பொருளாதார ஸ்தீரதன்மையை மேற்கொள்ள முடியும். அதனால் தான் நாட்டின் பணத்தை அச்சடிக்கும் பொறுப்பு மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் ஊடாக மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை தற்போது நிதியமைச்சர் எடுத்து கொள்வதற்கான நடவடிகக்கைகளை எடுத்து வருகிறார். நாடாளுமன்றத்தினால் மத்திய வங்கிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை நிதியரமைச்சர் பறிக்க முற்படுவது. நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை பறிப்பதற்கு சமனாகும். இந்த அதிகாரங்களைப் பெற்றுக்கொண்டு நாட்டுக்கு வரும் அந்நிய செலவாணிகளுக்கு வழி சமைப்பதே நிதியமைச்சரின் நோக்கமாகும்.

வெளிநாடுகளுக்கு மேற்கோள்ளப்படும் பிரதான ஏற்றுமதிளான தேயிலை, தேங்காய் போன்றவற்றிற்கான கொடுக்கல் வாங்கல் நடைமுறை கணக்கின் ஊடாக எளிதாக இடம்பெறுகிறது. ஆனால், மூலதன வியாபாரங்களின் முன்னெடுக்கப்படும் கொடுக்கல் வாங்கல்களின் போது மத்திய வங்கி கட்டுப்பாட்டுடன் முன்னெடுக்கப்படுகிறது. இந்தக் கட்டுப்பாட்டு அதிகாரத்தை தனக்கு கீழ் கொண்டு வருவதற்கு முயற்சிக்கும் நிதியமைச்சர் தனக்கு ஏற்றாற் போல கொடுக்கல் வாங்கல்களுக்கு அனுமதியளிக்கும் நிலை ஏற்படும்.

மத்திய வங்கியின் அதிகாரங்களை நாணய கட்டுப்பாட்டுச் சட்டமூலத்தின் ஊடாக நிதியமைச்சர் புலம்பெயர்ந்துள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களின் முதலீட்டை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கின்றார்.

விடுதலைப்புலிகள் சட்டவிரோதமாக ஈட்டிய இந்த பெருந்தொகையான நிதி மத்திய வங்கியின் கட்டுப்பாட்டின்றி நாட்டுக்குள் வருவதால் இந்நிதி நாட்டின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பங்குகளை தன்னகப்படுத்தி இந்நாட்டின் பொருளாதாரத்தை புலம்பெயர்ந்துள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார்கள் என தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]