நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று(வெள்ளிக்கிழமை) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த மழை வீச்சியானது பி.ப 2.00 மணிக்குப் பின்னர் பிற்பகலில் அல்லது மாலை வேளைகளில் பதிவாகலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென், மேல், மற்றும் வடமேல் கரையோரப் பிரதேசங்களின் பல இடங்களில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமேல், வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்ற அதேவளை, மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அத்தோடு, இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பொதுமக்கள் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]