நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறிப்பாக பிற்பகலில் அல்லது மாலையில் வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதன்படி மேல், தென் மற்றும் வடமேல் கரையோரப் பிரதேசங்களின் பல இடங்களில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை மத்திய, ஊவா, சப்ரகமுவ, வட மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என எதிர்பாக்கப்படுகின்றது.

அத்தோடு, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]