நாட்டின் பல பாகங்களில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்யும்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் விசேடமாக மேற்கு சப்ரகமுவ மத்திய ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு சப்ரகமுவ மத்தி ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியை எதிர்பார்க்கக்ககூடும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் கரையோரப்பிரதேசத்தில் காலைவேளையில் ஓரளவு மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய காலநிலையின் போது இப்பிரதேசங்களில் கடும்காற்று வீசக்கூடும் .இடிமின்னல் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.