நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிக மழைவீழ்ச்சி பதிவாகும்…

நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிக மழைவீழ்ச்சி பதிவாகும்…

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பானது, இன்று (புதன்கிழமை) வளிமண்டலவியல் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று மாலை அனுராதபுரம், மட்டக்களப்பு, கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, திருகோணமலை, மன்னார் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மழைபெய்யும் வேளையில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் எனவும், இதன்காரணமாக மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் மலையகப் பகுதிகளில் வசிப்போர் மண்சரிவு தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பல பகுதிகளில் நாட்டின் பல பகுதிகளில் நாட்டின் பல பகுதிகளில்

நாட்டின் பல பகுதிகளில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]