நாட்டின் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக சரத் பொன்சேகாவுக்கு இராணுவத்தில் உயர் பதவி

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடைய அதி உயர் பதவியொன்றை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

 சரத் பொன்சேகா
சரத் பொன்சேகா

நாட்டில் தற்போது போராட்டங்கள் இடம்பெற்று வருவதால், அனைத்து தரப்பினரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இவற்றை சீர்செய்யும் நோக்கிலேயே சரத்பொன்சேகாவுக்கு புதிய பதிவியொன்று வழங்கப்படவுள்ளது.

இதற்காக இரண்டு வருடங்களுக்கு அமைச்சு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு சரத்பொன்சேகா ஜனாதிபதியால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு சரத் பொன்சேகா இணக்கம் தெரிவித்ததாகவும் புதிய பதிவிக்கான போதியளவு அதிகாரங்கள் தமக்கு வழங்கப்படுமானால் பதவித் துறக்கத் தயார் என அறிவித்தாக அமைச்சர் ராஜித்த சேனாரட்ண தெரிவித்துள்ளார்.

இதனால் பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடைய உயரிய பதவி அல்லது முப்படைகளின் தளபதி என எந்தவொருப் பதவி வேண்டுமானாலும் அவருக்கு வழங்கப்படக்கூடிய வாய்ப்புள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]