நாட்டின் சட்டதிட்டங்கள் மற்றும் உரிய செயற்பாட்டு வரைமுறைகளை மீறி செயற்பட்டதில்லை

நாட்டின் சட்டதிட்டங்கள்அகதிகள் விடயத்தைக் கையாளும் போது, நாட்டின் சட்டதிட்டங்கள் மற்றும் உரிய செயற்பாட்டு வரைமுறைகளை மீறி எந்த தருணத்தில் செயற்பட்டதில்லை என்று உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

மியன்மார் – ரோஹிங்யா முஸ்லிம்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்த விளக்கமளிப்பு ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகில் விபத்துக்குள்ளான படகொன்றில் இருந்து 30 ரோஹிங்ய அகதிகள மீட்கப்பட்டனர்.

அவர்கள் முதலில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அதன் பின்னரே ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரகத்தின் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

அதேபோன்று இதற்கு முன்னரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னரே, அகதிகள் உயர்ஸ்தானிகரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]