நாட்டின் காலநிலையில் மாற்றம்

நாட்டின் பல பிரதேசங்களிலும் கடற்பிரதேசங்களிலும் மழை மற்றும் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கிழக்கு மாகாணங்களில் கிட்டத்தட்ட 150 மில்லிமீற்றர் அதிக மழைவீழ்ச்சி சாத்தியப்படக்கூடும் என்றும் சில பகுதிகளில் சுமார் 100 மில்லிமீற்றர் மழை பொழியக்கூடும் என்று திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் வடபகுதியில் சுமார் 40 -50 கிலோமீற்றர் வேகத்திற்கு கடும் காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டை சூழவுள்ள கடற் பகுதிகளில் சீற்றம் காரணமாக இந்த நிலையை எதிர்பார்ப்பதாகவும் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.