நாடு முழுவதும் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யும்

நாடு முழுவதும் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யும்

நாடு முழுவதும் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் சாத்தியக் கூறுகள் அதிகரித்து காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை  அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்படுகின்றது.

அத்தோடு மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் மின்னல் தாக்கங்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே மக்கள் மின்னல் தாக்கங்களிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களை பாதுகாத்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]