நாடு கடனில் மூழ்கியுள்ளது மீட்டெடுக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது

நாடு கடனில் மூழ்கியுள்ளது. 2026ஆம் ஆண்டுவரைதான் எனக்கு கடனை மீள செலுத்தும் காலம் உள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் நாட்டை கடனில் இருந்து மீட்பதுடன், அபிவிருத்தியையும் செய்ய அரசு திட்டங்களை வகுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொடகாவலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் வலியுறுத்தியுள்ளதாவது,

3600 கோடி அமெரிக்க டொலர்களை இலங்கை கடனாகச் செலுத்த வேண்டியுள்ளது. முன்னாள் அரசின் வினைதிறனற்ற ஆட்சியில் பெற்றுக்கொண்ட கடன்களே இவ்வாறு பெருக்கமடைந்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்குள் இலங்கை பெற்றுக்கொண்டுள்ள கடனைச் செலுத்த வேண்டும்.

நல்லாட்சி அரசு மேற்படி கடனைச் செலுத்தும் பொருளாதார முறைமைகளை கண்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே சர்வதேச நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கையில் முதலீட்டை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்து வருகின்றோம்.

கடனை மீள செலுத்து முறைமைகள் தொடர்பில் வார வாரம் அரசு பேச்சுகளை நடத்துகிறது. கடனைச் செலுத்து காலப்பகுதியில் நாட்டில் அபிவிருத்தியையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது. 2017ஆம் ஆண்டு தொடக்கம் அப்பாந்தோட்டை துறைமுகத்திற்காக முன்னாள் அரசு பெற்றுக்கொண்டுள்ள கடனின் வட்டித்தொகையும் அதிகரித்துள்ளதாகவும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]