நாடாளும்னறம் அமைதியின்மைக்கு காரணம் மைத்திரி- மஹிந்த ஆதரவாளர்கள்- அநுரகுமார திஸாநாயக்க சாடல்

பாராளுமன்றத்தைக் கூட்டினால் கொலைகள் இடம்பெற வாய்புண்டு என்ற அச்சத்தினாலே பாராளுமன்றத்தை கலைத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தமைக்கான காரணத்தை தெரிவிக்கும் முகமாக வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்ததைப் போன்று பாராளுமன்றத்தில் கொலை சதித்திட்டத்தினை மேற்கொண்டிருந்தவர்கள் அவரது ஆதரவாளர்களே என்பது இன்று நிரூபணமாகியுள்ளது என மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்ற அமர்வு இன்று வெள்ளிக்கிழமை கூடியிலிருந்து போது மஹிந்தராஜபக்ஷ தரப்பினரால் ஏற்படுத்தப்பட்ட அமளிதுமளியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் மற்றும் அவரது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளை தாக்கி கொலை செய்ய முற்பட்டனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொலை சதி முயற்சி செய்யப்பட்டதாக அண்மையில் தெரிவித்திருந்தார். அவருடைய தரப்பினரே அந்த கொலைச்சதிக்காரர்கள் என இன்று உறுதியாகியுள்ளது. காரணம் அந்த இரு தரப்பினர் தவிர ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமது இருக்கைகளில் அமைதியான முறையில் அமர்ந்திருந்தனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]