நாடாளுமன்ற வளாகத்தில் மேலதிக பொலிஸார் குவிப்பு- பெரும் பரபரப்புடன் கொழும்பு

நாடாளுமன்ற வளாகத்தில், மேலதிக பொலிஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்துக்குப் பிரவேசிக்கும் பிரதான நுழைவாயிலுக்கு அருகில், நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளும் வாகனங்கள் தயாரான நிலையிலும் கலகமடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்திலும், பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடல்

12.23 PM : நாடாளுமன்ற செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம்.

12.20 PM : சபாநாயகர் கருஜசூரிய தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்று வருகின்றது

12.15 PM : அரசாங்க தரப்பினரை பிரதிநிதித்துவப்படுத்தும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில், சற்று நேரத்துக்கு முன்னர் ஆரம்பமாகியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

12.00 PM : ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வருகின்றது.

11.08 AM :நாடாளுமன்ற வளாகத்தில், மேலதிக பொலிஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்துக்குப் பிரவேசிக்கும் பிரதான நுழைவாயிலுக்கு அருகில், நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளும் வாகனங்கள் தயாரான நிலையிலும் கலகமடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்திலும், பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கருஜசூரிய தலைமையில் கூடவுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றினுள் மக்கள் பார்வைக்கு செல்வதற்கு அனுமதியளிக்கப்படமாட்டாது.

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ள நிலையில், அதற்கு முன்தாக, ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகளின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]