நாடாளுமன்ற புனரமைப்புக்கு 1000 மில்லியன் ஒதுக்கப்படவில்லை

நாடாளுமன்ற கட்டத் தொகுதியின் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக 1,000 மில்லியன் ரூபாய் அரசாங்கத்தின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை சபநாயகர் ஊடகப்பிரிவு மறுத்துள்ளது.

இது குறித்து கடந்த சில நாட்களாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை எனவும், சபநாயகர் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

30 வருடங்கள் பழைமையான நாடாளுடன்ற கட்டடத் தொகுதியானது, பொதுமக்களின் சொத்து என்றும், எந்தவொரு கட்டடத்தையும் குறிப்பிட்ட காலப்பகுதியில் புனரமைப்பு செய்யவேண்டியது அத்தியாவசியம் எனவும் அப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தின் ஊடாக இந்த வருடத்தில் 200 மில்லியன் ரூபாய் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.