முகப்பு News ‘நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக தயார்’

‘நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக தயார்’

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக தயார் என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் தற்போது 16 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு கிடைத்துள்ளதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம உறுதிப்படுத்தினால் அதனை தான் நிறைவேற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன், இலங்கைக்கு 16 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு கிடைத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் முற்றிலும் பொய்யானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான முதலீடு இலங்கைக்கு கிடைத்திருப்பதாக உறுதிப்படுத்தினால் உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தாம் விலகி, அமைச்சர் மலிக் சமரவிக்ரமவின் அலுவலக உதவியாளராக இணைந்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், அங்கு அதிகாரிகளின் உதவியுடன் முதலீடு எவ்வாறு கொண்டு வரப்பட்டது என்பதை அறிந்து கொண்டு, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு இரு மடங்கு முதலீட்டினை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com