நாடாளுமன்ற உறுப்பினர் ‘பிரசன்ன ரணவீர’வை கைதுசெய்ய நடவடிக்கை

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ‘பிரசன்ன ரணவீர’வை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களனி பிரதேச சபை வேட்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவை கைதுசெய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.

கிரிபத்கொட பகுதியில் உள்ள வீட்டில் இடம்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவருடன் வந்திருந்த மற்றுமொரு நபர் ஆகியோர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த நபர் கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]