நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 1வது சர்வதேச மாநாடு இன்று ஆரம்பம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான முதலாவது சர்வதேச  மாநாடு இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் குறித்த மாநாடு, கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.

ஈவன் கொழும்பு 2018 என பெயரிடப்பட்டுள்ள இந்த மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதிவரை நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாநாட்டில் 74 நாடுகளைச் சேர்ந்த 101 நாடாளுமன்ற உறுப்பினர்களும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், அபிவிருத்தி செயற்பாட்டாளர்களும் பங்கேற்கவுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]