நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டு பயணங்கள் ரத்து

ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிர்வரும் ஏப்ரல் 01ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரையிலான நாட்களில் வெளிநாடு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 4ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோல்வியடையச் செய்வதற்கு வாக்களிக்க வேண்டியுள்ளதனால், இவர்களின் வெளிநாட்டுப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தற்பொழுது, வெளிநாட்டுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளவர்களையும் நாடு திரும்பும்படி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.