நாடாளுமன்ற உறுப்பினருக்கு மீண்டும் விளக்கமறியல்

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேரா மற்றும் அவரது சகோதரரான ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்த பெரேரா ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரையும், ஜூன் மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ மொராயஸ் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதையடுத்து,
சிலாபம் மேல் நீதிமன்ற பதிவாளர் அஜித் ஜயசுந்தர முன்னிலையில் இவர்களுக்கு எதிரான வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாளொன்றில், ஆராய்ச்சிக்கட்டு பிரதேச செயலாளர் மீது தாக்குதல் நடத்தியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இருவரும் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இட வேண்டும் என்ற பிணை நிபந்தனையை இவர்கள் இருவரும் பூர்த்தி செய்யவில்லை என, பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி தொடக்கம் இதுவரையில் இவர்கள் கையொப்பமிடவரவில்லை என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ மொராயஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது, பிணை நிபந்தனையை மீறிய குற்றச்சாட்டில் இருவரம் இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இதனையடுத்து, இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்தப்பட்ட நிலையில், விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]