நாடாளுமன்றில் மன்னிப்பு கோரிய அருந்திக பெர்னாண்டோ

நாடாளுமன்றில் அண்மையில் இடம்பெற்ற குழப்பநிலையின் போது, தாம் சபாநாயகரின் கதிரையில் அமர்ந்தமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ நாடாளுமன்றில் மன்னிப்பு கோரியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துக் கொண்ட போது, அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை அடுத்து, அப்போதிருந்த அரசாங்கத்துக்கு எதிரான அவநம்பிக்கைப் பிரேரணை கொண்டுவர முயற்சிக்கப்பட்ட வேளையில் நாடாளுமன்றில் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ, சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்து சபை நடவடிக்கைகளை முன்கொண்டுசெல்ல தடையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]