முகப்பு News Local News நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவது தொடர்பில் தீர்மானம் – மகிந்த

நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவது தொடர்பில் தீர்மானம் – மகிந்த

நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவது தொடர்பில் தீர்மானிப்பதற்காக ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஒன்றிணைந்த எதிரணியின் கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது.

முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அலகப்பெரும, சுசில் பிரேமஜயந்த மற்றும் ஒன்றிணைந்த எதிரணியை அங்கத்துவப்படுத்தும் கட்சி தலைவர்கள் அடங்குகின்றனர்.

நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவது தொடர்பான சட்ட ஆலோசனைகளை பெற்று கொள்வதற்காக சட்டத்தரணிகள் சிலரும் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,  ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்கு மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதம் மூலம் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குற்றவியல் திணைக்களம் இக் கடிதத்தினை அனுப்பிவைத்துள்ள நிலையில், நாளை மறு தினம் இவ்வாறு வாக்கு மூலம் பெறப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதம் கொழும்பு – 07 விஜேராம மாவத்தையில் உள்ள மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com