நாடாளுமன்றில் இன்று பி.ப 1மணிக்கு நடக்கப்போவது என்ன??

வழமையாக கடந்த மூன்று தினங்கள் நடந்ததை போன்று சபாநாயகர் மகிந்த தரப்புக்கு பெரும்பான்மை இல்லை என்பதை நிருபிக்கும் முயற்சி தொடரும்,

நேற்று ஜனாதிபதி கூட்டிய சர்வகட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவுகள் எதுவும் இன்றி கூட்டம் முடிந்தது.

இருந்தும் முரண்பாடுகள் இன்றி நாடாளுமன்றம் ஒழுங்காக இடம்பெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதாக அங்கு தெரிவித்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவை பிரதமராக நியமிக்க தயாரில்லை என்பதை அவரின் கடந்த கால செயல்பாடுகள் தெளிவுபடுத்தியுள்ளது.நேற்றய கூட்டத்திலும் பொருத்தமான பிரதமரை தெரிவு செய்யுமாறு ஜனாதிபதி கூறியது ரணில் விக்கிரமசிங்கா பொருத்தமில்லை என்பதே அவர் சொல்லாமல் சொன்ன பதில்.

இன்னும் ஒன்றையும் அவர் கூறினார் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் குரல்பதிவு வாக்கெடுப்பு அல்லது மின்தொழில்நுடப (Electronic System) வாக்கெடுப்பு மட்டுமே சாத்தியம் வேறு முறைகளில் பெரும்பான்மையை காட்டுவது ஏற்கமுடியாது என கூறிவிட்டார்.

இதனால் ஏற்கனவே கடந்த மூன்று தினங்கள் (14.15,16,) நாடாளுமன்றத்தில் மகிந்தவுக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானங்கள் செல்லுபடியில்லை என்பதே ஜனாதிபதியின் வாதம்.

அப்படியானால் இன்று குரல் மூலம் அல்லது மின்தொழில்நுட்ப வாக்கெடுப்பு சாத்தியமா? என்றால் இல்லை என்பதே பதில்.

இவ்வாறான வாக்கெடுப்பு நடத்துவதற்கு சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றை குழப்பம் விளைவிக்காமல் தமது இருக்கைகளில் இருந்துகொண்டு இந்த வாக்கெடுப்புக்கு பூரண ஆதரவு வழங்கி ஒத்துழைக்க வேண்டும்.

ஆனால் கடந்த மூன்று நாட்களும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்படி நடக்கவில்லை விடுகாலிகளாகவும் சண்டியர்களாகவும் குழப்பங்களை விளைவித்து எப்படியும் நாடாளுமன்றத்தை இயங்க விடாமல் செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர்.

இன்றய நாளிலும் மகிந்ததரப்பு ஆதரவாளர்கள் தமது ஆசனங்களில் இருந்து வாக்கெடுப்புக்கு ஒத்துழைப்பார்கள் என்பது கேழ்விக்குறிதான்.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தை ஒத்திபோட மாட்டேன் என்று கூறினாலும் அவரின் இந்த கூற்றில் மறைமுகமாக நான் ஒத்தி போடா விட்டாலும் எனது சகாக்கள் ஒத்திபோட வைப்பார்கள் என்ற கருத்தும் இதில் உள்ளதா என்றும் சிந்திக்க தோன்றுகிறது.

எது எப்படியாயினும் யாரை பிரதமராக தெரிந்தாலும் ஜனாதிபதி விரும்பாதவர் பிரதமராக நியமிக்கப்ப்பட்டால் ஜனாதிபதி முன் பதவிப்பிரமாணம் வர்தமானி அறிவிப்பு எதிர்கால ஆட்சி என்பவைகள் எல்லாம் பாரிய முரண்பாடுகள் நிறைந்து காணப்படும் என்பதே உண்மை.

இன்றும் நாடாளுமன்றத்தில் குழப்பநிலைதான் தோன்றும் என்பதே உண்மை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]