நாடாளுமன்றம் நீரில் மூழ்கும் அபாயத்தில்

இலங்கை நாடாளுமன்றம் நீரில் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

கொழும்பை அண்மித்த பகுதிகளில் இன்னும் சில மணித்தியாலங்களுக்கு தொடர்ச்சியாக மழை பெய்தால், நாடாளுமன்ற கட்டடத் தொகுதி நீரில் மூழ்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதி மாத்திரமன்றி அதனை அண்டிய பகுதிகளில் உள்ள வீடுகளும் நீரில் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தியவன்னா ஓயாவின் நீர் மட்டம் அதிகரிப்பதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்;டுள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]