நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான யோசனை – ஜே.வி.பி!..

காலியில் நடைப்பெற்ற நிகழ்வொன்றில் பேசும் போது, நாடாளுமன்றத்தினுள் நிலவும் நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தவுடன், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான யோசனை ஒன்றை சமர்பிக்கவுள்ளதாக ஜே.வி.பி  தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், அரசியல் அமைப்புக்கு முரணாக அரசாங்கத்தை அமைத்ததும், நாடாளுமன்றத்தை கலைத்தமை தவறான விடயம், அந்த நடவடிக்கையை தோற்கடிக்க வேண்டும்.

அதற்காகவே ஜே.வி.பி செயற்படுகின்றதே தவிர ரணில் விக்ரமசிங்கவை பாதுகாக்க வேண்டிய அவசியம் தம்மிடம் இல்லை எனவும் தெரிவித்தார்.

அத்துடன், ரணில் விக்ரமசிங்க நாட்டின் ஜனநாயகத்தையோ, முறையான அரசியல் முன்னெடுப்புக்களையோ கடந்த காலங்களில் முன்னெடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]