நாடாளுமன்றத்தின் அமர்வு பிற்போடப்பட்டமை குறித்து அமைச்சர் கருத்து

அடுத்த நாடாளுமன்ற அமர்வு, நாடாளுமன்றத்தை புத்தாக்கம் செய்யும் நோக்கிலேயே பிற்போடப்பட்டுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வலஸ்முல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.

அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு புதிய திட்டங்களின் அடிப்படையில் தேசிய அரசாங்கம் செயற்படவுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்;ளார்.

அத்துடன், தேசிய அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் புதிய உடன்படிக்கை கைச்சாத்திடும் பணிகள் உரிய ஆராய்வுகளின் பின்னர் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜனாதிபதியோ தாங்களோ நாட்டை நிலைகுலையச் செய்கின்ற எந்த ஒரு தீர்மானத்தையும் ஒருபோதும் மேற்கொள்ளப்போவதில்லையெனவும் அமைச்சர் மகிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]