நாடாளுமன்றத்தைக் கலைக்கும் எண்ணம் ஜனாதிபதிக்கு இல்லை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாடாளுமன்றத்தைக் கலைக்கும் எண்ணம் இல்லை என்று ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் நள்ளிரவு தொடக்கம் மே 8ஆம் திகதி வரை நாடாளுமன்றத்தை முடக்கும் வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து பிபிசி சிங்கள சேவைக்கு கருத்து வெளியிட்ட போதே ஒஸ்ரின் பெர்னான்டோ, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் நோக்கம் ஜனாதிபதிக்கு கிடையாது என்று கூறியுள்ளார்.

அவர் இது குறித்து மேலும், “1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 70 (3) பிரிவு, நாடாளுமன்றத்தை முடக்கி விட்டு, கலைப்பதற்கான அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது. எனினும், அவ்வாறான நோக்கம் ஜனாதிபதிக்குமைத்திரிபால சிறிசேனவுக்கு கிடையாது.

இதற்கு முன்னரும் பதவியில் இருந்த ஜனாதிபதிக்ளும் கூட பலமுறை நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளனர். அரசியலமைப்பின் 70 (1) பிரிவின் கீழ் நாடாளுமன்றத்தை முடக்கியுள்ள ஜனாதிபதி, நாடாளுமன்றக் கூட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் நாளையும் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளார்.” என்று குறிப்பி்ட்டுள்ளார்.