நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் உறுப்பினர்களிடம் விசாரணை

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காகவே அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நவம்பர் மாதம் 14,15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது.

இதன் போது நாடாளுமன்றில் சுமார் இரண்டு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் ​சேதமடைந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]