நாடாளுமன்றக் கலரியில் பொதுமக்களுக்கு தடை?? காரணம் என்ன?

இலங்கையின் நாடாளுமன்றம் இன்று பிற்பகல் கூடவுள்ள நிலையில் நாடாளுமன்றில் பொதுமக்களுக்கென ஒதுக்கப்பட்ட கலரியில் இன்று தடை போடப்பட்டுள்ளது.

இதன்படி கலரியிலிருந்து நாடாளுமன்றச் செயற்பாடுகளை அவதானிப்பதற்கான சந்தர்ப்பம் இன்றைய தினம் பொதுமக்களுக்கு வழங்கப்படாதென கூறப்படுகின்றது.

கடந்த வாரங்களில் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சீரின்மையையடுத்து நாடாளுமன்றிலும் கடும் குழப்பங்கள் நிலவியுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற அமர்வுகளின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களால் கதிரைகள், புத்தகங்கள் மற்றும் மிளகாய்த்தூள் என்பனவற்றைக் கொண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

அந்தவகையில் இன்றைய தினமும் நாடாளுமன்றம் கூடவுள்ளதால் ஏதேனும் அசம்பாவிதங்கள் நேரக்கூடும் என்பதனாலேயே நாடாளுமன்றக் கலரியில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]