நாடாளாவிய ரீதியில் இரண்டு வார டெங்கு ஒழிப்புத் திட்டம் : சுகாதார அமைச்சு நடவடிக்கை

நாடாளாவிய ரீதியில் இரண்டு வார டெங்கு ஒழிப்புத் திட்டம் இன்றுமுதல் ஆரம்பமாகியுள்ளதாக சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது.

வெள்ளப் பெருக்கையடுத்து நாட்டில் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக அதிகளவான மழைபெய்து வருவதால் டெங்கு நுளம்புவின் பெருக்கம் பாரிய அளவு அதிகரித்துள்ளது.

நாடாளாவிய ரீதியில்

இந்த வருடத்தில் தற்போதுவரை 70ஆயிரம் நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளனர். இதில் 25வீதமானவர்கள் 19 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள். எனவே, உடனடியாக அதிகரித்துள்ள டெங்கு நுளம்பை கடுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டியுள்ளது.

இதன் நிமித்தமே மக்களுடன் இணைந்து இரண்டுவார டெங்கு ஒழிப்புத் திட்டம் இன்றுமுதல் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. குறித்த திட்டம் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரடன் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு நாட்டின் நலன் கருதி அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]