நாடளாவிய ரீதியில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் அனைவரும் பீதியில் – காரணம் தெரியுமா?

நாடளாவிய ரீதியாக முறையற்ற வகையில் கலப்படம் செய்யும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு அம்பாறையில் இடம்பெற்ற சம்பவம் பாரிய பீதியை ஏற்படுத்தியுள்ளது.

அம்பாறையில் உணவகமொன்றில் கடந்த வாரயிறுதியில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தை அடுத்து நாடு முழுவதிலும் உள்ள ​ஹோட்டல் உரிமையாளர்கள் அச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை தொடர்ந்து ஹோட்டல் உரிமையாளர்கள் தமது
சமையற்காரர்களை சரியான முறையில் வழி நடத்துவதாகவும்
தெரியவந்துள்ளது

சில ஹோட்டல் உரிமையாளர்கள் தரம் குறைந்த உணவுகளை சமைத்து வழங்கி வாடிக்கையாளரின் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் சாதாரணமாக இடம்பெற்று வந்தன.

இந்தநிலையில், அம்பாறை சம்பவம் கலப்பட உணவை வழங்கும்
ஹோட்டல் உரிமையாளர்களுக்கு தகுந்த பாடமாக அமைந்திருக்கின்றது.

அம்பாறையில் இடம்பெற்ற சம்பவத்தின் போது ஹோட்டல்
தாக்கப்பட்டமையோ அல்லது பள்ளிவாசல் உடைக்கப்பட்டமையோ
ஏற்றுக்கொள்ள முடியாத வன்முறைச் சம்பவமாகும்.

வன்முறைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம் ஒன்று உள்ளது.சம்பவத்தின் பின் ஹோட்டல் உரிமையாளர் தானாக சுயநினைவுடன் இயல்பான சாதாரண சூழ்நிலையில் புத்திகூர்மையுடன் வழங்கிய காணொளியில்! தான் செய்த மிகப் பெரிய குற்றத்தை சர்வ சாதாரணமாக சொல்கிறார்.

நீரிழிவு நோயுடைய ஒருவர் தன்னிடம் வந்து உணவு கேட்டதாகவும் அதற்கு தான் கோதுமை மா கலந்த கறியை கொடுத்ததாகவும் கூறுகிறார்.

நீரிழிவு நோய் உள்ள ஒருவருக்கு கோதுமை மா கலந்த உணவை வழங்க கூடாது என்பது உணவு தொடர்பான அடிப்படை அறிவு.

இந்த அடிப்படை அறிவு இல்லாமலா இவ்வளவு காலமும் அவர் உணவு தயாரித்து வந்தார்? ‘முறையற்ற ரீதியில் உணவு தயாரித்தேன் – கோதுமை மா போட்டேன்’ என்பதை மிக சாதாரணமாக கூறுகிறார்.

இது கோடிகளை களவெடுத்த எனக்கு இந்த கோழிக் களவா பெரிது என்ற தோரணையில் உள்ளது. நிற்க. நாடு முழுவதிலும் உள்ள சில ஹோட்டல்களில் இவ்வாறாக முறையற்ற விதத்தில் சமையல் செய்து கொள்ளை லாபம் அடிக்கப்படுகிறது.

குறிப்பாக

1. குழம்பு திடமாவதற்காக கோதுமை மாவை கலத்தல்
2. சோஸ் அளவைக் கூட்டுவதற்காக மாவையும், தண்ணீரையும் கலத்தல்.
3. பாலில் நீரை கலத்தல்.

4. சமையலறைப் பகுதியை படு கேவலமாகவும், அசுத்தமாகவும் வைத்திருத்தல்

இவ்வாறு 1000 குற்றங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஹோட்டல் உரிமையாளர்கள் உணர வேண்டியது தற்கால சமூகம் விழித்துக் கொண்டுள்ளது. அத்துடன் எந்த வேளையிலும், வில்லங்கமான காரணங்களை தேர்ந்தெடுத்து வித்தியாசமான முறையில் பதிலடிகள் கொடுக்கப்படலாம்.

அதற்கென்றே ஒரு கூட்டம் திட்டமிட்டு அலைகின்றது.

ஆகவே, இன, மத, மொழி பேதங்களை கடந்து நல்ல உணவுகளை
ஹோட்டல் உரிமையாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதன் ஊடாக இவ்வாறான வில்லங்கங்களை விலைகொடுத்து வாங்காமல் இருக்கலாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]