நாடளாவிய ரீதியில் 30 மேதினக்கூட்டங்கள்

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் அந்தக் கட்சியில் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் பொரளை கெம்பல் மைதானத்தில் மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளதுடன் பேரணி பிற்பகல் 2 மணியளவில் மாளிகாவத்தையில் ஆரம்பமாகவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கண்டி கெட்டம்பே மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளதுடன் கன்னொருவ மற்றும் கண்டி மகளிர் உயர் கல்லூரி ஆகிய இடங்களிலிருந்து இரு பேரணிகள் கண்டிக்கு வரவுள்ளன.

நாடளாவிய ரீதியில்

பொது எதிரணியின் மே தினக் கூட்டம் கொழும்பு காலிமுகத்திடலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலும், பிரதான எதிர்க்கட்சியான இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் அம்பாறையில் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையிலும், மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) மே தினக் கூட்டம் அந்தக் கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் கொழும்பு பீ.ஆர்.சி. மைதானத்திலும் நடைபெறவுள்ளன.

முன்னிலை சோஷலிசக் கட்சியின் மே தினப் பேரணி கோட்டை தனியார் பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமாகும். ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மே தினக் கூட்டம் அதன் தலைவரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் தலைமையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முன்னால் நடைபெறவுள்ளது.

ஏனைய அரசியல் கட்சிகளின் பேரணிகளும் கூட்டங்களும் நாட்டின் பல்வேறு பாகங்களில் நடைபெறவுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]