நாங்கள் அமைதியாக இருந்ததால் எங்களை கோலை என்று நினைத்து விட்டாயா ? சச்சினின் அதிரடி பேட்டி.

கடந்த 14 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்ற பகுதியில் ஜெய்ஷ்  மொஹம்மது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 CRPF வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

அதற்கு பழி தீர்க்கும் வகையில் நேற்று அதிகாலை இந்திய விமானப்படையின் 12 மிராஜ் 2000 ரக போர் விமானிகள் எல்லை தாண்டிச்சென்று தீவிரவாதிகளின் முகாம்கள் , பயிற்சித்தளங்கள் ஆகியவற்றை தாக்கி அழித்துவிட்டு இந்தியா திரும்பியது.

இந்த தாக்குதலில் 300 கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் , பலரும் இந்திய விமப்படையின் இந்த துணிச்சல் மிகுந்த செயலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று ட்விட்டரில் நமது நல்ல குணத்தை பலவீனமாக கருதக்கூடாது , இந்திய விமானப்படைக்கு எனது சல்யூட் , ஜெய்ஹிந்த் என பதிவிட்டிருந்தார்.

இன்று காலை சச்சின் அவர் வெளியில் செல்லும்போது அவரை சந்தித்த ஆங்கில தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் ஒருவர் இதுபற்றி அவரிடம் கேட்டபோது
நமது நாடு அமைதியாக இருப்பதால் நமக்கு வீரம் இல்லை என்று அர்த்தமல்ல , நாம் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுகிறோம் என்று அர்த்தம்.

நாம் அவசரப்படாமல் 12 நாட்களாக திட்டம் தீட்டி நேற்று அவர்களை தக்க சமயம்பார்த்து அடித்ததால் தான் நாம் வெற்றிபெற்றோம்.

புல்வாமா தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுத்ததன் மூலம் நமது பலத்தை உலகம் அறிந்தது , இனி தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த பயப்படும் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி முடித்த அந்த 12 விமானிகளுக்கு, அவர்களுக்கு பின்னால் இருந்து உதவியவர்களுக்கும் எனது பாராட்டுக்கள் , அவர்கள் தான் இந்தியாவின் உண்மையான ஹீரோக்கள் என்று கூறினார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]