நாங்­கள் வெளிநாட்டை நாடி நிற்­கின்­றோம்

நாங்­கள் வெளிநாட்டை நாடி நிற்­கின்­றோம் ( Missing Persons )

எங்­கள் நிலைப்­பாட்டை இலங்கை அரசு புரிந்­து ­கொள்­ளாத நிலை­யில் நாங்­கள் வெளிநாட்டை நாடி நிற்­கின்­றோம். வெளிநாடு எங்­க­ளுக்குச் சரி­யான தீர்­வைப் பெற்­றுத்­த­ர­வேண்­டும் என்று வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் சங்­கத் தலைவி கலா­ரஞ்­சினி தெரி­வித்தார்.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­களை இலங்கைச் செஞ்­சி­லுவைச் சங்கத்தி­ன­ர் சங்­க மண்­ட­பத்­தில் சந்­தித்து நேற்­றுக் கலந்­து­ரை­யா­டி­னார். அதன் பின்­னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வித்தபோதே அவ்­வாறு தெரி­வித்­தார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வு­கள் 281ஆவது நாளாக (இன்று 282 நாள்)தொடர் போராட்­டத்­தில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றார்­கள். போராட்­டம் மேற்­கொண்டு ஒரு ஆண்டு நிறை­வ­டை­யப் போகின்­றது. இன்­று­வரை எது­வி­தத் தீர்­வும் இல்லை. பல இன்­னல்­க­ளுக்­கும் அச்­சு­றுத்­தல்­க­ளுக்­கும் மத்­தி­யில் பாது­காப்­பற்ற சூழ­லில் போராட்­டத்தை தொடர்­கின்­றோம்.

இறு­தி­யாக அர­ச­த­லை­வர் எங்­க­ளைச் சந்­தித்த போது, மறை­மு­க­மான சிறைச்­சா­லை­கள் தடுப்பு முகாம்­கள் தன்­னி­டத்­தில் இல்லை என­வும் தான் ஆட்­சிக்கு வந்­த­தன் பின்­னர் அப்­ப­டி­யான ஒரு நிலை இல்லை என­வும் தெரி­வித்­தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]