நாகாலாந்தில் சிறுமியை சீரழித்த காமக் கொடூரனுக்கு மக்கள் கொடுத்த தண்டனை

நாகாலாந்தில் சிறுமியை சீரழித்த காமக் கொடூரனுக்கு மக்கள் கொடுத்த தண்டனை வரவேற்பை பெற்றுள்ளது.

நாகாலாந்து மாநிலம் லாங்லெங் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் தன் வீட்டின் அருகாமையில் உள்ள வீட்டில் தினமும் சென்று டிவி பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வீட்டில் இருந்த இளைஞன் ஒருவன் இதனைப் பயன்படுத்தி அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ந்து போன சிறுமியின் பெற்றோரும் குழந்தைகள் நல அமைப்பினரும் அந்த இளைஞனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

நாகாலாந்தில்

அதுமட்டுமல்லாது குறித்த இளைஞனின் ஆடைகளைக் களைந்து அவனை நிர்வாணமாக்கி ரோட்டில் அடித்து இழுத்துச் சென்றனர்.

அவனது கழுத்தில் நான் ஒரு மைனர் பெண்ணை கற்பழித்தேன் என வாசகத்தை எழுதி மாட்டிவிட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவனை மீட்டு, காவல் துறைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]