நாகார்ஜுனா ஸ்டூடியோவில் தீ

ஐதராபாத்தில் உள்ள நடிகர் நாகார்ஜுனாவின் ஸ்டூடியோவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Akkineni Nagarjuna

இந்த தீயை 3 மணி நேர போராட்டத்துக்கு பின் அணைத்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் பிரபல நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டூடியோ உள்ளது.

இங்கு பல சினிமா, தொலைக்காட்சிகளுக்கான நாடகங்கள், நிகழ்ச்சிகளுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு நடப்பது வழக்கம்.

Akkineni Nagarjuna

இந்நிலையில், நேற்று மாலை 5.30 மணியளவில் படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட அரங்கில் புகைவர ஆரம்பித்து, பின்னர் சற்று நேரத்தில் தீ மளமளவென பரவ தொடங்கி கொளுந்துவிட்டு எரிந்துள்ளது.

இது குறித்து, தகவல் அறிந்த ஊழியர்கள் உடனடியாக படப்பிடிப்பை ரத்து செய்து, அனைவரையும் வெளியேற்றினர்.

Akkineni Nagarjuna

இதனால் ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர், இதையடுத்து, 5 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் அறிவிக்கப்படவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]