நவாஸ் ஷெரீப்பை விடுதலை செய்யுமாறு பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு

நவாஸ் ஷெரீப்பை விடுதலை செய்யுமாறு பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு

பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை விடுதலை செய்யுமாறு பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊழல் மோசடி குற்றச்சாட்டில் கடந்த ஜுலை மாதம் பத்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த அவர் 2 மாத தண்டனைக் காலத்தின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அவர்கள் இருவரும் தவறை மறுத்து, முன்வைத்த மேன்முறையீட்டின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொதுத் தேர்தலுக்கு முன்பாக இவர்களது விடுதலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, நவாஸ் ஷெரீப்பின் பாரியார் குல்சூம் நவாஸ் புற்றுநோயால் லண்டனில் வைத்து உயிரிழந்த ஒரு வாரத்தின் பின்னர் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளதோடு, அவரது இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காக தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டு, பின்னர் சிறைக்கு திரும்பியிருந்தனர் என்பதும் நினைவுக் கூறத்தக்கது.

ஊழல் மோசடிகள் தொடர்பாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக கடந்த ஜூலை மாதம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான அதி சொகுசு வீடொன்று மத்திய லண்டன் பகுதியில் இருந்தமை தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்த நிலையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]