நவராத்திரி விழாவை நடாத்த விடாது தடுத்த பெண் தாதியர் ஆசிரியர் – இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தாதியர்கள்

மட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரியில் கல்வி பயிலும் தாதியர்கள் அங்கு அமைந்துள்ள ஆலயத்தில் நவராத்திரி விழாவை நடாத்த பெண் தாதியர் ஆசிரியர் ஒருவர் தடைவிதித்தார்.

இதனைக் கண்டித்து கல்விபயிலும் தாதியர்கள் அவரை இடமாற்றுமாறு கோரி இன்று (வியாழக்கிழமை) போதனா வைத்தியசாலை பணிப்பாளர் காரியாலயத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த தாதியர் பயிற்சி கல்லூரியில் தமிழ் சிங்களம் முஸ்லீம் என 336 பேர் கல்விபயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு அமைந்துள்ள ஆலயத்தில் நவராத்திரி பூஜை வழிபாடு இடம்பெற்றுவந்த நிலையில் அங்கு ஆசிரியராக கடமையாற்றிவரும் பெண் தாதியர் ஆசிரியர் நவராத்திரி பூஜை நடாத்தி வந்த தாதியர்களை பல்வேறு வகையில் அச்சுறுத்தி நெருக்கடி கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் புதிதாக வந்த தாதியர்கள் நேற்று புதன்கிழமை நவராத்திரி பூஜையில் பங்கு கொள்ளக் கூடாது என 33 தாதியர்களை வலுக்கட்டாயமாக வகுப்பறையில் அடைத்து வைத்து கல்வி கற்பித்துள்ளார்.

இதனையடுத்து ஏனைய தாதிய மாணவர்கள் அங்கு சென்று அவர்களை மீட்டதுடன் தாதியர் அதிபரின் கவனத்திற்கும் கொண்டுவந்தனர்.

இதன் பின்னர் ஆலயத்தில் மாலையில் இடம்பெற்ற நவராத்திரி பூஜையில் குறித் ஆசிரியர் சென்று அங்கு தாதியர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு நவராத்திரி பூஜை நடாத்தக் கூடாது எனவும் ஆலயத்தை இடிக்கப் போவதாகவும் அவர்களை வழிபடவிடாது தடுத்து அட்டகாசம் புரிந்துள்ளார்.

இவ் ஆசிரியரின் தொடர்ச்சியான இன முரண்பாடு செயற்பாடு மற்றும் நவராத்தி பூஜை நடாத்தவிடாத நடவடிக்கைகளை எதிர்த்தனர்.

அங்கு கல்விபயிலும் தாதிய மாணவர்கள் இன்று (வியாழக்கிழமை) கல்வியை பகிஷ்கரித்து,

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் காரியாலத்துக்கு முன்னாள் ஒன்று கூடி குறித்த ஆசிரியரை இடமாற்றுமாறு கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் குறித்த தாதி ஆசிரியர் 33 மாணவர்களை அடைத்து வைத்தது தொடர்பாக பொலிஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அவர் தொடர்பாக சுகாதார திணைக்கம் அமைச்சுக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் உடனடியாக அவரை இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் உறுதிமொழி வழங்கினார்.

இதனையடுத்து பகல் 1 மணியளவில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தாதியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]