நவம்பர் மாதம் பிறந்தவர்கள் பக்கத்துல இருந்தா கொஞ்சம் கவனமா இருங்க!

ஒருவர் பிறந்த மாதத்தினை வைத்து இவர் எப்படிப்பட்டவர் என்பதை கூற முடியுமாம். பிறக்கும் மாதம் ஒருவரின் குணங்களில் ஆதிக்கம் செலுத்துமாம்.

அந்த வகையில் இன்று வகையில் நவம்பர் மாதம் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் என தெரிந்துக் கொள்வோம்.

இவர்கள் தனிமை விரும்பிகள்நவம்பர்

மாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் தனிமையை விரும்புபவர்களாக இருப்பார்கள் அவர்களின் ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு விரும்பமாட்டார்கள். இந்த தந்திரமான உலகத்தில் இருந்து தன் சுயத்தை பாதுகாத்து கொள்ள இவர்கள் எப்பொழுதும் தனிமையில் இருக்க விரும்புவார்கள். அவர்கள் மற்றவர்களுடன் நன்கு பழகுவார்கள் ஆனால் அவர்கள் விதிகளுக்கு உட்பட்டு. அவர்களின் தனிமையில் கூட நேர்மையாகவும், உண்மையாகவும் இருப்பார்கள்.

நேர்மையான நண்பர்கள்

நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் நேர்மை மற்றும் விசுவாத்திற்கு எடுத்துக்காட்டாக இருப்பார்கள். அவர்கள் ஒருவர் மீது விசுவாசம் வைத்துவிட்டால் அவர்கள் சாகும்வரை அதனை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் அவர்கள் நண்பர்களை ஒருபோதும் ஏமாற்றவோ, விட்டுக்கொடுக்கவோ மாட்டார்கள்.

இவர்களை புரிந்துகொள்வது கடினம்

அவர்கள் தனிமை பெரும்பாலும் அவர்களை மற்றவர்கள் தவறாக புரிந்துகொள்ள நேர்கிறது.அவர்கள் மனதளவில் மென்மையானவர்கள் மற்றும் இனிமையானவர்கள். அவர்கள் எப்பொழுதும் வேண்டுமென்று யாரையும் காயப்படுத்த விரும்பமாட்டார்கள் ஆனால் இவர்களின் பொறுமையால் மற்றவர்கள் காயப்பட்ட நேரலாம். அவர்கள் செய்யாத தவறுகளுக்கு பலநேரம் பழிசுமப்பார்கள்.

தனித்துவமானவர்கள்

அவர்கள் அதிக கற்பனைத்திறன் மிக்கவர்கள். புதுமை என்பது அவர்களின் அடிப்படை பிறவி குணங்களில் ஒன்று. அவர்களை போல மற்றொருவரை நீங்கள் பார்ப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. அவர்களுக்கு வாழ்க்கையை பற்றிய அணுகுமுறை எப்பொழுதும் வித்தியாசமானதாக இருக்கும், அனைத்து விஷயங்களையும் அவர்கள் பார்க்கும் கோணமே வேறுமாதிரி இருக்கும். இதுதான் அவர்களை தனித்துவமானவர்களாகவும், சிறப்பானவர்களாகவும் மாற்றும்.

வசீகரமானவர்கள்

தோற்றத்தால் மட்டுமல்ல மனதாலும் அவர்கள் மற்றவர்களை வசீகரிக்க கூடியவர்கள். அவர்களிடம் உள்ள சில மர்மமான குணங்கள்தான் அனைவரையும் ஈர்க்கிறது. பலரும் இவர்களின் குணம் மற்றும் புகழ் கண்டு பொறாமைப்படுவார்கள்.

கோபக்காரர்கள்

இவர்களின் மிகப்பெரிய பிரச்சினையே முன்கோபம்தான். அவர்களுக்கு ஏதேனும் தவறு செய்துவிட்டால் நிச்சயம் அதற்காக பழிவாங்காமல் விடமாட்டார்கள். சிலசமயம் பழிவாங்காமல் அவர்களுக்கு தூக்கமே வராது. இந்த எண்ணத்தை மட்டும் கட்டுப்படுத்திக்கொண்டால் அது இவர்களுக்கு மிகப்பெரிய பலமாய் அமையும். இது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

உணர்ச்சிகரமானவர்கள்

இது நவம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் மிகப்பெரிய பலவீனமாகும். ஒரு செயல் நடக்கவில்லை என்றாலோ அல்லது ஒரு சூழ்நிலையில் இருந்து வெளியே வர முடியாவிட்டாலோ அவர்கள் தங்கள் சுயத்தை இழந்துவிடுவார்கள். அவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு நிலைதடுமாறும்போது அதனை மற்றவர்கள் எளிதாக பயன்படுத்திக்கொள்வார்கள். அவர்கள் இதயம் ரொம்ப மென்மையானதால் மற்றவர்கள் அதனை பலவீனமாக பயன்படுத்துவார்கள்.

அழிவை ஏற்படுத்தகூடியவர்கள்

நவம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் மிகப்பெரிய பலவீனம் அவர்களின் அழிவை ஏற்படுத்தக்கூடிய இந்த குணம்தான். அவர்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய அனைத்தையும் அவர்களின் முன்கோபமே நொடியில் அழித்துவிடும். இது பொருட்களில் மட்டுமல்ல அவர்கள் உருவாக்கிய உறவுகளிலும் அப்படித்தான். அவர்களின் உறவுகளில் விரிசல் ஏற்பட அவர்கள்தான் காரணமாக இருப்பார்கள்.

பொறாமைப்படக்கூடியவர்கள்

அவர்கள் சில நேரங்களில் பொறாமை எண்ணமும், விரோத எண்ணமும் கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு தங்கள் பலம் மற்றும் பலவீனம் நன்கு தெரியும். எனவே அவர்கள் தங்களை விட சிறந்தவர்களை பார்க்கும்போது அவர்கள் மேல் பொறாமைப்படுவார்கள்.

அநீதியை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்

தங்களுக்கோ அல்லது தங்களை சுற்றி இருப்பவர்களுக்கோ எந்த அநீதி நடந்தாலும் அவர்கள் அதனை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். இவர்களை சுற்றி எந்த தப்பு நடந்தாலும் அதற்கு எதிராக குரல் கொடுப்பார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]