முகப்பு News Local News நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலையே இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை தொடர்பான இறுதி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் நோக்கில் நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் இன்று மாலை சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போது, எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, 92 ஒக்டோன் பெற்றோலின் விலை 8 ரூபாயாலும், 95 ஒக்டோன் பெற்றோலின் விலை 7 ரூபாயாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 9 ரூபாயாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாயாலும்; அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com