நள்ளிரவில் ராகுல் காந்தி போராட்டம்

பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று நள்ளிரவு டெல்லி இந்தியா கேட் பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார்.

ஜம்மு ஜாஷ்மீரின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யபட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதாகியுள்ளவரை விடுவிக்க கோரி அம்மாநில பா.ஜ.க மந்திரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதே போல உத்தரப்பிரதேசம் உனா நகரில் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது வன்புணர்வு புகார் கொடுத்த தந்தை காவல்துறை கஸ்டடியில் இருந்து மரணமடைந்தார்.

இந்த சம்பவங்களை கண்டித்தும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று நள்ளிரவு டெல்லி இந்தியா கேட் பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார்.

இந்த பேரணியில் பிரியங்கா வதேரா மற்றும் அவரது கணவர் ராபர்ட் வதேரா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் தொண்டர்களும் பங்கேற்றனர்.

தூங்கி கொண்டிருக்கும் மத்திய அரசை எழுப்பவே நள்ளிரவில் போராட்டம் நடத்துகிறோம் என, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]