நல்வாழ்விற்கான உடல், உள ஆரோக்கியத்தை மேம்படுத்தல்

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான “நல்வாழ்விற்கான உடல், உள ஆரோக்கியத்தை மேம்படுத்தல்” எனும் கருப்பொருளில் செயல்முறைப் பயிலரங்கு புதன்கிழமை (13) கலைகலாசார பீடக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழகக் கலைகலாசார பீட இந்துநாகரிகத் துறைத் தலைவர் கலாநிதி திருமதி சாந்தி கேசவன் அவர்களது ஒழுங்குபடுத்தலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைகழகத்தின் பிரதி உபவேந்தர் வைத்திய கலாநிதி கே.இ.கருணாகரன், கலைகலாசார பீட பீடாதிபதி மு.ரவி, விரிவுரையாளர்களான கலாநிதி வ.குணபாலசிங்கம், நா.வாமன், ஜீ.பால்ராஜ்   உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மாணவர்களுக்கான செயல்முறைப் பயிலரங்கினை நிகழ்த்துவதற்கான வளவாளராக ஐக்கிய அமெரிக்க சவுத் கரோலினா மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சுந்தர் பாலசுப்பிரமணியன் சமூகமளித்திருந்தார்.

வளவாளராகக் கலந்து சிறப்பித்த பேராசிரியர் சுந்தர் பாலசுப்பிரமணியனுக்கு இந்துநாகரிகத் துறை சார்பாக நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]