முகப்பு News Local News நல்லூர் பிரதேச செயலகத்தில் அம்மன் குளத்தினை தூர்வாறும் போது புகைகிளம்பியதால் அப்பகுதியில் பரபரப்பு

நல்லூர் பிரதேச செயலகத்தில் அம்மன் குளத்தினை தூர்வாறும் போது புகைகிளம்பியதால் அப்பகுதியில் பரபரப்பு

யாழ். அரியாலை மணியம்தோட்டம் பகுதியில் உள்ள அம்மன் குளத்தில் இருந்து ஆட்லெறி செல்வின் விசிறி (ஃபான்) கண்டு எடுக்கப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச செயலகத்தினால், மணியம்தோட்டம் பகுதியில் உள்ள அம்மன் குளத்தினை தூர்வாரப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் தூர்வாறும் போது குளத்தில் இருந்து புகை எழும்பியுள்ளது.

புகை எழும்புவதைக் கண்டு, அமாநுசியம் அல்லது மனித எச்சங்கள் இருக்குமோ என்ற சந்தேகத்தில் தூர்வாறுவதை நிறுத்தியதுடன், சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தல் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் யாழ்.நீதிமன்றத்தின் அனுமதி பெற்று இன்று (27) விசேட அதிரடிப்படையின் இணைந்து, நல்லூர் பிரதேச சபை மீண்டும் குளத்தினை தூர்வாறும் நடவடிக்கையினை முன்னெடுத்த போது, அந்த குளத்தில் இருந்து , பழைய ஆட்லெறி செல்லின் விசிறி (ஃபான்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முன்னர் இந்தப்பகுதியில் இராணுவத்தின் முகாம் காணபட்டதுடன், பின்னர் அப்பகுதியில் பொது மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com