நல்லூர் பிரகடனம் 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து வெளியீடு

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின்  காணிகளை விடுவிக்குமாறுகோரி நல்லூர் பிரகடனம் இன்று தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்  12 அம்சக் கோரிக்கைகளுடன்  வெளியிடப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சமய வழிபாடுகளை மேற்கொண்டுதேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் 12 அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கிய பிரகடனத்தை வெளியிட்டது.

தமது உரிமைகள் வெல்லப்படும் வரையில் தொடர்ந்தும் போராட்டம் நடத்தப்படும் என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஹேமன் குமார இதன்போது தெரிவித்திருந்தார்.

காணி உரிமைகளை இழந்து வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியாமல் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள மற்றும் பல்வோறு அபிவிருத்தி செயற்பாடுகளால் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள மக்களே இங்கு இருக்கின்றனர். இந்த மக்களுக்கு பலத்தை வழங்கும் வகையில் நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்.

இந்த மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும். அதேபோல் இராணுவம் உள்ளிட்ட அதிகாரிகளும் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் அவர்களின் கோரிக்கை நியாயமானது.

அவர்களின் இடம், அவர்களின் வீடு அவர்களின் கிராமத்தில் சுதந்திரமாக வாழுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். யுத்தம் காரணமாக நிர்கதிக்குள்ளாகியுள்ள மக்களுக்கு வாழ்வதாரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகள் மேற்கொள்ளப்ப் வேண்டும் தெளிவான திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என்பதே எமக்கு புலப்படுகின்றது.

தெற்கில் இனவாதத்தை தூண்டுவோரின் அழுத்தங்களுக்காக அமைதியாக அரசாங்கம் இருப்பதாயின் மக்கள் வழங்கிய ஆணையை புறம் தள்ளியே அவர்கள் செயற்படுகின்றார்கள் என்பதை அரசாங்கத்திற்கு நாங்கள் கூறுகின்றோம். வடக்கு கிழக்கு மக்கள் தமது வாழ்வில் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்தனர் என்றும் அதன்போது அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த பிரகடனத்தில் படையினரின் காணி ஆக்கிரமிப்பு பிரதானமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]